Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவு - வர்த்தகம் நிறுத்தம்

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (11:25 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் இன்று வரலாறு காணாத அளவில் குறியீட்டு எண் வீழ்ச்சி அடைந்தது.

இதனால் மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் 1 மணி ந ேரம் தற்க ாலிகமாக நிறுத்தப்படுவதா க இன்று காலை 10 மணிக்கு பங ்குச் சந்தை அறிவித்தது.

காலையில் மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் தெடங்கியதுமே எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு குறைவாகவே வர்த்தகம் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் குறியீட்டு எண் 1,743 புள்ளிகள் சரிந்தது 17,307 ஆக குறைந்தது. ( நேற்றைய இறுதி நிலவரம் 19051.86 )

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் நிப்டி 525 புள்ளிகள் சரிந்து, 5143 புள்ளிகளாக குறைந்தது. ( நேற்றைய இறுதி நிலவரம் 5668 ).

பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி, மும்பை பங்குச் சந்தையிலும் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலைகள் 10 விழுக்காடு, 15 விழுக்காடு, 20 விழுக்காடு குறையும் போதும், ஒரு மணி நேரம் வர்த்தகத்தை நிறுத்தும் படி கூறியுள்ளது.

இதன்படி பங்குச் சந ்தையில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

Show comments