Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை குறைந்தது!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (20:29 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

தங்கம் 10 கிராமுக்கு ரூ.80ம், பார் வெள்ளி 1 கிலோவுக்கு ரூ.115ம் குறைந்தது.

வெளிநாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவல்களாலும், மற்ற நகரங்களில் உள்ள தங்கம், வெள்ளி சந்தையில் இருந்து வந்த தகவல்களாலும், நகை வியாபாரிகள் தங்கம், வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டாத காரணத்தினால் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் வெள்ளியின் விலை கிலோ ரூ.18,120க்கு விற்பனையானது. தொழில் துறையினர் வெள்ளி வாங்க ஆர்வம் காட்டாத காரணத்தினால், காலையிலேயே வெள்ளி விலை குறைந்தது. இதன் விலை மேலும் குறைந்து இறுதியில் கிலோ ரூ.18,100 ஆக முடிவடைந்தது. இது இதற்கு முந்தைய நாளின் விலையை விட ரூ.100 குறைவு.

இதே போல் தங்கத்தின் விலையும் நகை வியாபாரிகள் ஆர்வம் காட்டாத காரணத்தினால் காலையிலேயே விலை குறைந்து காணப்பட்டது. காலையில் தங்கம் 24 காரம் 10 கிராம் ரூ.9,490 என்ற அளவிலும், 22 காரட் ரூ.9,440 என்ற அளவிலும் இருந்தது.

தங்கத்தின் விலை மேலும் 24 காரட்டுக்கு 10 கிராமுக்கு ரூ.70 ம், 22 காரட்டிற்கு ரூ.80ம் குறைந்தது.

இறுதி விலை நிலவரம் :

தங்கம் 24 காரட் 10 கிராம ் ரூ.9,470 ( ரூ.9,540)
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.9,420 ( ரூ.9,500)
வெள்ளி பார் 1 கிலோ ரூ. 18,100 ( ரூ.18,125)

அடைப்ப ுக ் குறிக்குள் உள்ளவை முந்தைய தினத்தின் விலை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments