Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்பாக்கம் வேக ஈனுலை : பெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்!

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (16:44 IST)
கல்பாக்கத்தில் மத்திய அரசின் இந்திய அணு சக்திக் கழகத்தின் கட்டுமான அமைப்பான பாவினி அமைத்துவரும் 550 மெகாவாட் வேக ஈனுலைக்கான டர்பன் ஜெனரேட்டர் மற்றும் உபகரணங்களை அளிக்கும் ஒப்பந்தத்தை பாரத் மிகு மின் நிறுவனம் பெற்றுள்ளது!

சர்வதேச அளவில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளில் போட்டியிட்டு இந்த ஒப்பந்தத்தை பெல் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுவரும் வேக ஈனுலை (Fast Breeder Reactor - FBR) 2009 ஆம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்கவுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. தற்பொழுது அணு உலையும் நிறுவப்பட்டுவிட்ட நிலையில், அதற்குத் தேவையான டர்பைன் ஜெனரேட்டரை அமைப்பதற்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது பெல் நிறுவனம்.

இன்று பிரதமரால் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட தாராப்பூரின் 2 மின் நிலையங்கள் நிர்மானத்திலும் பெல் நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments