Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி, தஞ்சையில் ஏரிகள் நிரம்பியதால் வெள்ள ஆபத்து!

Webdunia
தஞ்ச ை, திருச்ச ி, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 178 பெரும் ஏரிகளும ், குளங்களும் நிரம்பிவிட்டதால் மேலும் மழை பெய்தால் அதனால் பெரும் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது!

வங்கக் கடலில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திருச்ச ி, பெரம்பலூர ், கரூர ், புதுக்கோட்ட ை, தஞ்சை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பிற்கு உள்ளானது.

திருச்சியையும ், தஞ்சையையும் இணைக்கும் சாலையில் ஏரி ஒன்றில் இருந்து உடைத்துக் கொண்டு பாய்ந்த வெள்ள நீர் போக்குவரத்தை பாதித்தது. ஏற்கனவ ே, மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட வெள்ள நீரால் பாதிப்பிற்கு உள்ளான காவிரி மாவட்டங்கள ், தொடர்ந்து பெய்த மழையால் மீண்டும் தத்தளிக்கின்றன.

திருச்ச ி, தஞ்ச ை, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 178 பெரும் ஏரிகளும ், குளங்களும் நிரம்பியுள்ளன. இவைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ள பொதுப்பணித்துற ை, ஏரிக்கரைகளை கண்காணிக்கத் துவங்கியுள்ளது.

இம்மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. மழை விட்டு நீர் வடிந்த பிறகுதான் அவைகளின் விதி என்னவென்பது தெரியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

Show comments