Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்மறி ஆடு, முயல் வளர்க்க வழிகாட்டு மையம்!

Webdunia
விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தமிழ்நாட்டு விவசாயிகள் மழை பொய்த்து தங்கள் தொழில் பாதிக்கப்படும் பொழுதெல்லாம் மாற்றுத் தொழிலின்றி அண்டை மாவட்டங்களுக்கு தஞ்சம் பிழைக்கச் செல்லும் நிலைக்கு தீர்வு தருகிது கொடைக்கானலில் இயங்கிவரும் தென் மண்டல ஆராய்ச்சி மையம்!

கொடைக்கானலில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ள மன்னவனூர் என்ற இடத்தில் இயங்கிவரும் தென் மண்டல ஆராய்ச்சி மையம் செம்மறியாட ு, முயல் மற்றும் உரோம ஆராய்ச்சி ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தில் 1965 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் அமைக்கப்பட்ட மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையத்தின் தென் மண்டல கிளையான இந்த ஆராய்ச்சி மையம் 1970-ல் அமைக்கப்பட்டது.

செம்மறியாடு வளர்ப்பிலும ், இறைச்சி இன முயல் வளர்ப்பிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டிடவும ், அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கிடவும் இந்த ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

பாரத் மெரீனோ என்றழைக்கப்படும் பொலி கிடாக்களை உருவாக்கிய மத்திய செம்மறியாடு ஆராய்ச்சி மையம ், இங்கு பல்வேறு இன முயல்களை வளர்த்த ு, ஆய்வு செய்து அதனை எவ்வாறு வளர்த்து பயன் பெறலாம் என்கின்ற ஆலோசனைகளையும ், அதற்குரிய அத்தியாவசியப் பொருட்களையும் அளிக்கின்றது. (பார்க்க இறைச்சி இன முயல் வளர்ப்பு)

இங்கு பாரத் மெரீனோ என்கின்ற நல்ல வளர்ச்சியைத் தரும ், நிறைய உரோமத்தைத் தரும் செம்மறியாட்டு வகையை வளர்ப்பது மட்டுமின்ற ி, இறைச்சிக்காக வளர்க்கப்படும் முயல்கள் பற்றியும ், உரோமத்தை மட்டுமே தந்து நல்ல வருவாயைத் தரக்கூடிய ஜெர்மன் அங்கோரா வகை முயல்களையும் வளர்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆடு வளர்ப்ப ு, முயல் வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட விரும்புவோருக்கு இம்மையத்தில் கட்டணத்துடன் 5 நாட்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.

மிகக் குறைந்த முதலீட்டில் நல்ல வருவாயை ஈட்டக்கூடிய பண்ணைத் தொழில்களுக்கு இந்த மையம் ஆலோசனை தருகிறது.

பாரத் மெரீனோ - இரு பயன்கள் கொண்ட செம்மறியாட ு
இறைச்சி இன முயல் வளர்ப்பு
செம்மறியாட ு, முயல்களுக்கு புல் மற்றும் தீவனப் பயிர்கள்
தென் மண்டல ஆராய்ச்சி மையம் - ஒர் அறிமுகம்

தொடர்புகொள்ள :

பொறுப்பு அலுவலர ்,
தென் மண்டல ஆராய்ச்சி மையம ்,
மன்னவனூர் அஞ்சல ்
கொடைக்கானல் - 624 103
திண்டுக்கல் மாவட்டம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

Show comments