Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2010 முடிவில் சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவு

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2010 (16:59 IST)
2010 ஆம் ஆண்டின் கடைசி தினமான இன்று மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 120 புள்ளிகள் அதிகரித்து நிறைவடைந்தது. தேசியப் பங்குச் சந்தையும் உயர்வுடன் இந்த ஆண்டை நிறைவு செய்தது.

கடந்த இரண்டு நாட்களில் சுமார் 363 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ் இன்று 120.02 புள்ளிகள் அதிகரித்து 20,509.09 புள்ளிகளாக 2010ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.

பரந்துபட்ட தேசியப் பங்கு சந்தை நிப்டி 32.65 புள்ளிகள் அதிகரித்து 6,134.50 புள்ளிகளாக நிறைவுற்றது.

ஆசியப் பகுதிகளில் சென்செக்ஸ்தான் இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டது என்று பங்குச் சந்தைத் தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று 17,464.81 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதன் பிறகு தொடர்ந்து அதிகரிப்பும், சில வேளைகளில் குறைவதுமாக பயணம் மேற்கொண்ட சென்செக்ஸ் இந்த ஆண்டில் சிறப்பாகச் செயல் பட்ட ஆசியப் பங்குச் சந்தையாகும்.

30- பி.எஸ்.இ. பங்குக் குறியீட்டில் 22 நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டன. தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் நீங்கலாக மற்ற குறியீடுகள் அனைத்தும் சாதகமாக சூழ்நிலையில் ந ிற ைவடைந்தன.

இந்த ஆண்டு பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு 61% அதிகரித்தது. இந்த ஆண்டு மட்டும் இந்தியப் பங்குகளுக்கான ஒட்டு மொத்த மூலதன வரத்து ரூ.1.31 ட்ரில்லியன் என்று செபி தகவல் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

Show comments