Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (10:54 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. ஆனால் சில நிமிடங்களிலேயே மாற்றம் ஏற்பட்டது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 2,800 புள்ளிக்கும் குறைந்தது.
காலையில் ரியல்எஸ்டேட், வாகன உற்பத்தி, வங்கி பிரிவு பங்கு விலைகள் குறிப்பிட்ட அளவு குறைந்து இருந்தது.
உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து இருந்தது.

இன்று இந்திய பங்குச் சந்தையில் அடிக்கடி மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, இன்று ஆசிய நாடுகளில், இலங்கை தவிர மற்ற பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.

காலையில் பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, சென்செக்ஸ் 37, நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் துவங்கும் போதே, எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

இன்று ஆசிய பங்கு சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

இன்று சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 350.81, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 5.13, ஜப்பானின் நிக்கி 5.00, ஹாங்காங்கின் ஹாங்செங் 350.81, சீனாவின் சாங்காய் காம்போசிட் 37.38 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்ற ு எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. டோவ் ஜோன்ஸ் 121.70, எஸ் அண்ட் பி 500- 6.28, நாஸ்டாக் 1.25 புள்ளி குறைந்தது.

ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் நேற்று சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-64.14 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.40 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 5.80 ( NSE-nift y) புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2,797.25 ஆக இருந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 35.09 ( BSE-sense x) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,166.76 ஆக இருந்தது.

மிட் கேப் 4.83, பி.எஸ ்.இ. 500- 26.24, சுமால் கேப் 9.43 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.37 மணியளவில் 671 பங்குகளின் விலை அதிகரித்தும், 786 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 48 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நிகரமாக ரூ.27.08 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் நிகரமாக ரூ.284 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

Show comments