Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை உயர்வு

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (10:46 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, இன்று ஆசிய நாடுகளில் மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா தவிர மற்ற பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 127.51, நிஃப்டி 36.60 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் பாதிப்பு காரணமாக, இன்று இந்திய பங்குச் சந்தையில் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தாலும், இதே நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறியே. நேற்று பங்குகளை விற்பனை செய்த நிறுவனங்கள், இன்று வாங்கும். இதனால் அடிக்கடி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இன்று சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 11.12, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 16.67, ஜப்பானின் நிக்கி 65.05, ஹாங்காங்கின் ஹாங்செங் 79.49, சீனாவின் சாங்காய் காம்போசிட் 27.64 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நாஸ்டாக் மட்டும் அதிகரித்தது. டோவ் ஜோன்ஸ் 64.03, எஸ் அண்ட் பி 500- 0.44 புள்ளிகள் குறைந்தன. நாஸ்டாக் 18.01 புள்ளி அதிகரித்தது.

ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தை நேற்று சரிவை எதிர்கொண்டது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-71.86 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 27.10 ( NSE-nift y) புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2,763.75 ஆக உயர்ந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 93.89 ( BSE-sense x) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,160.59 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 4.83, பி.எஸ ்.இ. 500- 26.24, சுமால் கேப் 9.43 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.35 மணியளவில் 846 பங்குகளின் விலை அதிகரித்தும், 610 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 69 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நிகரமாக ரூ.125.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் நிகரமாக ரூ.161.38 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments