தங்கம் விலை உயர காரணம் ?

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (16:57 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இது வரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்தது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.475 அதிகரித்துள்ளது. இதே போல் பார் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.645 உயர்ந்துள்ளது.

மும்பை தங்கம் வெள்ளி சந்தையின் இறுதி நிலவரப்படி இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 40 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.70 அதிகரித்தது.

இன்றும் நகை தயாரிப்பாளர்கள் அதிக அளவு தங்கத்தை வாங்கினார்கள். இதனால் காலையில் சந்தை தொடங்கும் போது அதிகரித்த விலை இறுதி வரை குறிப்பிடும் அளவு குறையவில்லை.

பங்குச் சந்தை, பண்டக சந்தைகளில் அடிக்கடி மாற்றம் இருப்பதால், பலர் தங்கத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்கின்றனர். இதுவே தங்கம் வெள்ளி விலை அதிகரிப்பதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இன்று மாலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 14,280 (நேற்று ரூ.14,240)
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.14,215 (ரூ.14,175)
பார் வெள்ள ி கிலோ ரூ.19,865 (ரூ.19,795).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரியாதையா ட்ரீட் பண்ணா பேச்சுவார்த்தை ரெடி!.. இறங்கி வரும் ஈரான்!..

பயிர்க்கடன் ரத்து!. தஞ்சாவுர் கூட்டத்தில் விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்!..

விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்தவர் விபத்தில் பலி?.. இதுக்கு இல்லையா எண்டு!...

ஒரே நாளில் 25 லட்சம் பயனர்கள் சாட்ஜிபிடியில் இருந்து திடீரென வெளியேற்றம்.. என்ன காரணம்?

ஈரான் போருக்காக ரூ. 83 லட்சம் கோடி செலவு செய்யும் டிரம்ப்.. வரி செலுத்தும் மக்கள் அதிருப்தி..!

Show comments