Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 51-சென்செக்ஸ் 188 புள்ளி உயர்வு

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (17:30 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த நண்பகல் 12.15 மணியளவில் அதிகரிக்க துவங்கின. இறுதி வரை எவ்வித மாற்றமும் இல்லாமல் படிப்படியாக அதிகரித்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 187.96 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,424.24 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 50.85 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,874.80 ஆக உயர்ந்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 38.03, சுமால் கேப் 35.64, பி.எஸ ். இ 500- 62.71 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று தேசிய பங்குச் சந்தையில் நடந்த வர்த்தகத்தில் ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை 73.02%, எவினிக்ஸ் அசோசரிஸ் 18.52%, சென்டூம் எலக்ட்ரானிக்ஸ் 17.24%, பர்ஸ்ட்சோர்ஸ் சொலியூசன் 16.84%, டைனாகான் சிஸ்டம்ஸ் 14.29%, ஸ்டெர்லிங் டூல்ஸ் 13.84%, சிஜால் ஆர்சிடெக்டசல் கிளாஸ் 13.71%, அன்சால் ப்ராபர்ட்டிஸ் 13.47%, ஹைடெக் பிளாஸ்ட் 13.11%, சுப்ரிம் இன்ப்ராக்சர் 12.78%, டி.எல்.எப் 8.29%, ஹெச்.சி.எல் டெக் 6.37%, ஹின்டால்கோ 6.30%, சுல்ஜான் 5.59%, ரிலையன்ஸ் கேப்பிடல் 5.42%, செயில் 5.33%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 5.07%, ரிலையன்ஸ் இன்ப்ரா 4.87%, சீமென்ஸ் 4.77%, பாரத ஸ்டேட் பாங்க் 4.71% அதிகரித்தது.

அதே நேரத்தில் ஜி.ஐ.இன்ஜினியரிங் பங்கு விலை 25.80%, முரளி இன்டஸ்டிரிஸ் 10.41%, எஸ்.டி.ஐ இந்தியா 10.07%, ஆர்த்தி டிரக்ஸ் 9.81%, ஹான்யங் டாய்ஸ் 9.75%, ரீஜென்ஸி செராமிக்ஸ் 9.68%, எல்.சி.சி இன்போடெக் 9.09%, பீம் இன்டஸ்டிரிஸ் 8.93%, மாஸ்டெக் 8.62% பன்சாலி இன்ஜினியரிங் 8.50%, சன் பார்மா 6.25%, பி.ஹெச்.இ.எல் 2.76%, பவர் கிரிட் 2.43%, டாடா மோட்டார்ஸ் 1.58%, ஹீரோ ஹோன்டா 0.84%,டாடா கம்யூனிகேஷன்ஸ் 0.82%, என்.டி.பி.சி 0.32%, இன்போசியஸ் 0.27% குறைந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1377 பங்குகளின் விலை அதிகரித்தது. 1015 பங்குகளின் விலை குறைந்தது. 113 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் பிரிவு குறியீட்டு எண் 4.32%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 1.76%, மின் உற்பத்தி பிரிவு 0.22%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 1.27%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 3.58%, தொழில் நுட்ப பிரிவு 0.92%, உலோக உற்பத்தி பிரிவு 4.05%, வாகன உற்பத்தி பிரிவு 1.09%, வங்கி பிரிவு 1.99%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.34%, அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

Show comments