Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 15 பைசா சரிவு

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (11:45 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா சரிந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் தொடர்ந்து நான்கு நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வந்த, ரூபாயின் மதிப்பு இன்று குறைந்தது.

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்யும். இவைகளுக்கு டாலர் தேவைப்படும் என்பதால் வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்கின. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளும் டாலரை வாங்கியதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.49.12 ஆக அதிகரித்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 15 பைசா உயர்வு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.97-48.98.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

Show comments