Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவு

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (10:40 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, ஆசிய நாடுகளின் மற்ற பங்குச் சந்தைகளும் சரிவை எதிர்கொண்டன. அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளில் நேற்று குறியீட்டு எண்கள் குறைந்தன. இதை தொடர்ந்து இன்று ஆசிய நாடுகளில் சரிவு ஏற்பட்டது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி காலையில் வர்த்தகம் தொடங்கும் போது 2,800 என்ற அளவிற்கும் கீழ் சரிந்தது.

ஆனால் அதற்கு பிறகு உயர துவங்கியது. இன்று பங்குச் சந்தை அதிக மாற்றத்துடன் இருக்க வாய்ப்புண்டு.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 91.420, நிஃப்டி 26.90 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாடுகளில், இன்று காலை எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் சரிந்தன.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 24.91, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 5.16, ஜப்பானின் நிக்கி 318.45, ஹாங்காங்கின் ஹாங்செங் 62.78 புள்ளிகள் சரிந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்ற ு குறியீட்டு எண்கள் சரிந்தன. டோவ் ஜோன்ஸ் 226.44, நாஸ்டாக் 50.50, எஸ் அண்ட் பி 500- 28.95 புள்ளிகள் சரிந்தன.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலை நிலவியது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-105.09 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 21.60 ( NSE-nift y) புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 2,802.35 ஆக இருந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 73.79 ( BSE-sense x) புள்ளிகள் சரிந்து, குறியீட்டு எண் 9,162.43 ஆக குறைந்தது.

மிட் கேப் 9.23, பி.எஸ ்.இ. 500- 19.28, சுமால் கேப் 7.26 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.22 மணியளவில் 536 பங்குகளின் விலை அதிகரித்தும், 758 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 50 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நிகரமாக ரூ.84.64 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிகரமாக ரூ.580.11 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.









எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments