Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (10:53 IST)
பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த பங்குச் சந்தையில், இன்று காலை சாதகமான நிலை நிலவியது.

முன்பேர சந்தையின் ஒப்பந்தம் இன்று முடிவடைகிறது. இதனால் இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் அடிக்கடி மாற்றம் இருக்கும். அதே நேரத்தில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

பணவீக்கம் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட உள்ளது. பணவீக்கம் 5.40 என்ற அளவில் குறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 93.08, நிஃப்டி 10.05 புள்ளிகள் உயர்ந்தன.

ஆசிய நாடுகளில், இன்று காலை பிலிப்பைன்ஸ் தவிர, மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் உயர்ந்தன.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 1.72, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 6.96, ஜப்பானின் நிக்கி 36.97, ஹாங்காங்கின் ஹாங்செங் 688.17 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்ற ு குறியீட்டு எண்கள் உயர்ந்தன. டோவ் ஜோன்ஸ் 200.72, நாஸ்டாக் 53.44, எஸ் அண்ட் பி 500- 28.38 புள்ளிகள் அதிகரித்தன.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை நிலவியது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-100.79 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.35 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1.40 ( NSE-nift y) புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2,801.70 ஆக இருந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 67.43 ( BSE-sense x) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,324.94 ஆக இருந்தது.

மிட் கேப் 20.13, பி.எஸ ்.இ. 500- 17.06, சுமால் கேப் 27.36 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.34 மணியளவில் 915 பங்குகளின் விலை அதிகரித்தும், 558 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 56 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நிகரமாக ரூ.217.32 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிகரமாக ரூ.601.88 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments