Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 70 -சென்செக்ஸ் 229 புள்ளி சரிவு

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (16:35 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சரிந்த குறியீட்டு எண்கள், சுமார் 3 மணியளவில் உயர ஆரம்பித்தன. ஆனால் இறுதி வரை நேற்றைய நிலையை கூட எட்டவில்லை.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 229.02 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,100.55 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 69.60 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,796.60 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 27.52, சுமால் கேப் 12.37, பி.எஸ ். இ 500- 65.94 புள்ளிகள் குறைந்தன.

இன்று நடந்த வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் நெய்வேலி லிக்னெட் பங்கு விலை 13.27%, பவர் கிரிட் கார்ப்பரேஷன் 10.73%, என்.டி.டி.வி 4.81%, என்.டி.பி.சி 4.27%, பவர் பைனான்ஸ் 3.48%, ரிலையன்ஸ் இன்ப்ரா 3.16%, முந்த்ரா போர்ட் 3.09%, ஜி.வி.கே பவர் இன்ப்ரா 2.98%, டாக்டர் ரெட்டி லேபரட்டரிஸ் 2.55%, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 2.48%, பாரத் பெட்ரோலியம் 2.28%, டாடா டெலி சர்வீஸ் 2.27%, அல்ட்ரா டெக் சிமென்ட் 2.24% அதிகரித்தன.

அதே நேரத்தில் ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை 10.60%, பஜாஜ் ஆட்டோ 7.76%, ஜூ என்டர்டெய்மென்ட் 7.33%, பாந்தலின் ரீடெய்ல் 6.57%, டாடா ஸ்டீல் 6.34%, அம்புஜா சிமென்ட் 5.18%, இந்த்புல் ரியல் எஸ்டேட் 4.90%, பர்தி ஏர்டெல் 4.88%, ஓரியன்டல் பாங்க் 4.73%, செயில் 4.72%, சீமென்ஸ் 4.66%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 4.65% குறைந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1018 பங்குகளின் விலை அதிகரித்தது. 1342 பங்குகளின் விலை குறைந்தது. 95 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில்
ரியல் எஸ்டேட் பிரிவு குறியீட்டு எண் 3.31%, உலோக உற்பத்தி பிரிவு 3.76%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 1.99%, தொழில் நுட்ப பிரிவு 2.47%, வங்கி பிரிவு 3.11%, வாகன உற்பத்தி பிரிவு 2.59%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.04% குறைந்தது.

ஆனால் பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 0.33%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.33%, மின் உற்பத்தி பிரிவு 1.44% அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments