Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 28-சென்செக்ஸ் 39 புள்ளி சரிவு

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:11 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள் இறுதி வரை அதிகரிக்கவில்லை. அதே நேரத்தில் இன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 38.69 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,171.36 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 28.15 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 2,744.95 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 43.60, சுமால் கேப் 52.90, பி.எஸ ். இ 500- 30.63 புள்ளிகள் குறைந்தன.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன பிரச்சனையால் தகவல் தொழில் நுட்ப பிரிவில் உள்ள டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களின் பங்கு விலைகள் சரியவில்லை.

இன்று இன்போசிஸ் நிறுவனம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டு கணக்கு பற்றிய தகவலை வெளியிட்டது. இதன் நிகர இலாபம் 33% அதிகரித்து இருப்பதாக அறிவித்தது. இதன் நிகர இலாபம் ரூ.1641 கோடி. (சென்ற நிதி ஆண்டில் இதே கால கட்டத்தில் ரூ.1432 கோடி). வருவாய் ரூ.5786 கோடி. . (சென்ற நிதி ஆண்டில் இதே கால கட்டத்தில் ரூ.5418 கோடி) என்று இன்போசிஸ் அறிவித்தது.

இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ நிறுவன பங்குகளின் விலை 7.32%, இன்போசிஸ் 6.36%, ரான்பாக்ஸி லேபரட்டரிஸ் 5.82%, டாடா பவர் 3.93%, ஏ.சி.சி 3.81% உயர்ந்தது.

அதே நேரத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 6.42%, ஹெச்.டி.எப்.சி 3.80%, டாடா மோட்டார்ஸ் 3.24%, பர்தி ஏர்டெல் 3.06%, ஓ.என்.ஜி.சி 2.92% குறைந்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 848 பங்குகளின் விலை அதிகரித்தது. 1562 பங்குகளின் விலை குறைந்தது. 88 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 1.17%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.73%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 1.78%, மின் உற்பத்தி பிரிவு 1.11%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 0.65%, உலோக உற்பத்தி பிரிவு 1.15%, வாகன உற்பத்தி பிரிவு 0.16% குறைந்தது.

தகவல் தொழில் நுட்ப பிரிவு 4.71% தொழில் நுட்ப பிரிவு 0.85%, ரியல் எஸ்டேட் பிரிவு 0.13% அதிகரித்தது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments