நிஃப்டி 192-சென்செக்ஸ் 749 புள்ளி சரிவு

Webdunia
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், அதிக அளவு மாற்றத்துடன் தொடர்ந்தது. சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தின் நிதி முறைகேடு உள்ளிட்ட குற்றச் சாட்டுகளை தொடர்ந்து, அந்நிறுவனத்தின் சேர்மன் ராமலிங்க ராஜு பதவியை ராஜினாமா செய்தார். இந்த தகவல் பரவியதுடன் பங்குச் சந்தையில், குறியீட்டு எண்கள் சரிய துவங்கின

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 749.05 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,586.88 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 192.40 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 2,920.40 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 247.05, சுமால் கேப் 246.03, பி.எஸ ். இ 500- 270.13 புள்ளிகள் குறைந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 414 பங்குகளின் விலை அதிகரித்தது. 2111 பங்குகளின் விலை குறைந்தது. 57 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 8.06%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 5.28%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 9.35%, மின் உற்பத்தி பிரிவு 5.50%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 6.72%, உலோக உற்பத்தி பிரிவு 6.38%, தொழில் நுட்ப பிரிவு 7.77%, வாகன உற்பத்தி பிரிவு 3.63%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 9.32%, எஸ்டேட் பிரிவு 16.95% குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

இந்தியாவின் விருந்தினரை தாக்குவதா?!.. திமிருக்கு முடிவு கட்டுவோம்!.. அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்..

Show comments