பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
மும்ப ை: பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக ஏற்ற இறக்கத்துடன் துவங்கின.

காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 79.68, நிஃப்டி 15.10 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது.

மற்ற நாட்டு பங்குச் சந்தைளில் சாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தைகளில் அதிக அளவு பாதிப்பு இருக்காது. அதே நேரத்தில் அதிக வேறுபாடுடன் இருக்க வாய்ப்பு உண்டு.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

ஹாங்காங்கின ் ஹாங்செங் 82.20, சீனாவின் சாங்காய் காம்போசிட் 2.60 புள்ளிகள் குறைந்தது.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 22.54, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 22.66, ஜப்பானின் நிக்கி 143.23, புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 62.21, எஸ் அண்ட் பி 500-7.25, நாஸ்டாக் 24.35 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம் தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-59.28 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.30 மணியளவில் நிஃப்ட ி 12.60 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3,125.40 ஆக உயர்நதது.

இதே போல் சென்செக்ஸ ் 39.10 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,375.03 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 24.25, பி.எஸ ்.இ. 500- 16.42 சுமால் கேப் 36.12 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.25 மணியளவில் 1052 பங்குகளின் விலை அதிகரித்தும், 487 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 50 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.374.02 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் 11.81 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஒரு கோழை!.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர்!...

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்!. வாட்ஸ்அப்பை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!...

அமெரிக்காவுக்கு அதிக வரி செலுத்தும் நாடுகள் எது?... எவ்வளவு வரி!..

ஆனந்த் அம்பானி வாங்கியுள்ள தங்க கார்!.. எவ்வளவு கோடி தெரியுமா?!...

இந்தியா அப்படி எங்ககிட்ட எதுவும் சொல்லயே!.. டிரம்ப்பை கடுப்பேத்திய ரஷ்யா!...

Show comments