ரூபாய் மதிப்பு 38 பைசா உயர்வு

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (11:53 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.20 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை மாலை நிலவரத்தை விட 38 பைசா குறைவு.

வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.58 பைசா.

வெள்ளிக் கிழமையும் ரூபாயின் மதிப்பு 18 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய துவங்கியுள்ளன. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல சலுகைகளை அறிவித்துள்ளன. அத்துடன் இன்று இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருப்பதால் அந்நியச் செலவாணி சந்தையில் ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராட்டலாம்!. ஆனாலும் அரசியல்தான்!.. திமுகவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!..

2 வாரம் டைம்.. சென்னையிலே வைய்ங்க!.. சிபிஐ-க்கு கோரிக்கை வைத்த விஜய்!...

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்காதா? பயணிகள் அதிருப்தி..!

போட்டியின்றி தேர்வான தமிழக ராஜ்யசபா எம்பிக்கள்.. 6 பேர் யார் யார்?

கூரையை பிய்த்து கொண்டு வந்த அதிர்ஷ்டம்.. டாக்சி ஓட்டுனருக்கு கிடைத்த 10 கோடி லாட்டரி பரிசு..!

Show comments