அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியதையொட்டி காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது என்று முன்னாள் சென்னை கோயம்பேடு வியாபரிகள் சங்கத் தலைவரும், தற்போதைய ஆலோசனை உறுப்பினருமான செளந்திரராஜன் தெரிவித்தார்.
webdunia photo
FILE
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் சரக்கு ஏற்றி செல்லும் பணி முற்றிலும் தடைப்பட்டு உள்ளது.