ரூபாய் மதிப்பு 28 பைசா சரிவு

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (12:12 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 28 பைசா குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.49.04 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை நிலவரத்தை விட 27 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.76 பைசா.

பெட்ரோலிய நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும் அதிக அளவு டாலரை வாங்கியதால், இதன் மதிப்பு அதிகரித்தாதக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவின் ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் 9.9 விழுக்காடாக குறைந்தது. இதற்கு முந்தைய மாதத்திலும் ஏற்றுமதி குறைந்தது.

அதே நேரத்தில் இந்தியாவின் இறக்குமதி அதிகரித்து வருகிறது.

நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 11.5 பில்லியன் டாலராக உள்ளது. இது சென்ற வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவு. (சென்ற வருடம் நவம்பர் ஏற்றுமதி 12.7 பில்லியன் டாலர்).

அதே நேரத்தில் இறக்குமதி 6.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த நவம்பர் மாதம் 21.5 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது

ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்து இருப்பதால் வர்த்தக பற்றாக்குறை நவம்பர் மாதத்தில் மட்டும் 10 பில்லியன் டாலராக உள்ளது.

அந்நிய நாடுகளுடான இந்திய வர்த்தகத்தில் பற்றாக்குறை அதிகரிப்பதால், இறக்குமதியாளர்களும். பெட்ரோலிய நிறுவனங்களும் அதிக அளவு டாலரை வாங்குகின்றன். இதனால் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரிந்து, டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா போட்ட ஆர்டர்!.. ஆடிப்போன பழனிச்சாமி!.. டெல்லியில் நடந்தது என்ன?....

நாங்க நினைச்சிருந்தா விஜய் வெளியவே வந்திருக்க முடியாது!.. ஹெச்.ராஜா ராக்ஸ்....

திருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆஃப்லைன் டிக்கெட்டுகள் நிறுத்தம்.. இனி முழுமையாக ஆன்லைன் டிக்கெட் மட்டுமே..!

விமானங்களில் இனி பவர் பேங்க் எடுத்துச் செல்ல முடியாதா? புதிய கட்டுப்பாடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..!

Show comments