புத்தாண்டில் ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை

Webdunia
வியாழன், 1 ஜனவரி 2009 (11:51 IST)
புத்தாண்டு தினமான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவக்கியுள்ளது முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 11.40 மணியளவில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு சென்செக்ஸ் 121 புள்ளிகள் உயர்ந்து 9,768 ஆக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்து 2,992 ஆக காணப்பட்டது.

பெரும்பாலான பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. அவற்றில் இந்தியா இன்ஃபோலைன் 8.12% உயர்வையும், எஸ்ஸார் ஆயில் நிறுவனப் பங்குகள் 6.57% உயர்வையும், என்.டி.டி.வி நிறுவனப் பங்குகள் 6.5% உயர்வையும் சந்தித்துள்ளன.

எனினும் பாரத் பெட்ரோலியம், பீனிக்ஸ் மில்ஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ரான்பாக்ஸி ஆகிய நிறுவனப் பங்குகள் 2% அதிகமான விலை சரிவை சந்தித்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்று ஜெயலலிதா முன் கைகட்டி நின்னவர்தான் விஜய்! ‘ஜனநாயகன் பிரச்சினை குறித்து சரத்குமார் காட்டம்

நாளை முதல் 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.!

உங்க கனவ சொல்லுங்க, அதை திட்டமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

Show comments