Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 69-நிஃப்டி 20 புள்ளி சரிவு

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (17:47 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் நாள் முழுவதும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. மதியம் சுமார் 1.30 மணிக்கு பிறகு குறைய துவங்கின.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 68.85 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,647.31 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 20.35 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,959.35 ஆக குறைந்தது.

அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 19.05, சுமால் கேப் 47.63 புள்ளிகள் அதிகரித்தன. ஆனால் பி.எஸ ். இ 500- 11.75 புள்ளிகள் குறைந்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1499 பங்குகளின் விலை அதிகரித்தது. 935 பங்குகளின் விலை குறைந்தது. 108 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 1.29%, ரியல் எஸ்டேட் பிரிவு 0.41%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.05%, தொழில் நுட்ப பிரிவு 0.28%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 0.98% குறைந்தது.

மின் உற்பத்தி பிரிவு 0.27%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 0.49%, உலோக உற்பத்தி பிரிவு 0.18%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.09% வாகன உற்பத்தி பிரிவு 0.95% அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments