Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (12:06 IST)
மும்ப ை: பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இந்த வருடத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கும் போது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன. மத்திய அரசு மந்தகதியில் உள்ள பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டும் அறிவிப்பை அடுத்த சில நாட்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 386 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், இன்று வர்த்தகம் தொடங்கும் போது 109.74 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,825.90 ஆக உயர்ந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 23.15 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 3 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டி 3,002.65 ஆக உயர்ந்தது.

ஆனால் இன்றும் நேற்றைய நிலையே தொடர்கிறது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் அதிக ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.

காலை 11.45 மணியளவில் நிஃப்ட ி 6.40 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 2,985.90 ஆக உயர்ந்தது.

இதே போல் சென்செக்ஸ ் 36.68 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,752.85 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 46.52, பி.எஸ ்.இ. 500- 24.08, சுமால் கேப் 58.18 புள்ளிகள் அதிகரித்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments