Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு அதிக மாற்றமில்லை

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (12:09 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று மாலை இருந்த நிலையிலேயே இருந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.40-48.42 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை நிலவரத்தை விட 2 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.42 பைசா.

கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி, அந்நிய முதலீட்டாளர்கள், வங்கிகள் அந்நியச் செலவாணி வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. இதனால் அதிக அளவு வேறுபாடு இல்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் ஏற்றம் காணப்பட்டது. அதே நேரத்தில் ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 40 டாலருக்கும் குறைவாக இருந்தது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments