Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 25 பைசா சரிவு

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:35 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.20 ஆக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 25 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.46.95-46.96 பைசா.

பல்வேறு நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததாலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று கடந்த பதினோறு மாதங்களில் இல்லாத அளவிற்கு டாலரின் மதிப்பு 71 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments