Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (10:43 IST)
மும்ப ை: பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே அதிக ஏற்ற இறக்கத்துடன் துவங்கியது.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 27.67, நிஃப்டி 9.10 புள்ளிகள் குறைந்தன.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 36 டாலராக குறைந்தது. இதனால் பெட்ரோலிய துறையில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இலாபம் குறையும் என்பதால், அதன் பங்கு விலைகள் குறைந்தது. அத்துடன் வங்கியின் பங்குகள் உட்பட பல்வேறு பங்குகளின் விலை குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 219.35, எஸ் அண்ட் பி 500-19.14, நாஸ்டாக் 26.94 புள்ளிகள் குறைந்தன.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று பிரான்ஸ், சுவிட்சர்லாநது தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-6.47 புள்ளிகள் அதிகரித்தன.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.

காலை 10.30 மணியளவில் நிஃப்ட ி 3.50 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3,064.25 ஆக அதிகரித்தது.

இதே போல் சென்செக்ஸ ் 40.60 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,082.20 ஆக அதிகரித்தது.

அதே நேரத்தில் மிட் கேப் 17.38, பி.எஸ ்.இ. 500- 13.09, சுமால் கேப் 6.37 புள்ளிகள் அதிகரித்தது.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தம் இருந்தது.

ஹாங்காங்கின ் ஹாங்செங் 119.79, ஜப்பானின் நிக்கி 30.33 புள்ளிகள் குறைந்தன.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 18.75, சீனாவின் சாங்காய் காம்போசிட் 1.05, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 7.40 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.27 மணியளவில் 1012 பங்குகளின் விலை அதிகரித்தும், 423 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 52 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.33.17 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.355.99 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments