Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 61 பைசா உயர்வு

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (12:20 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 பைசா அதிகரித்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தாதல், இந்திய பங்குச் சந்தைகளிலும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பில் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

அத்துடன் ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்தனர். மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பும் குறைந்தது. இது போன்ற காரணங்களால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.30 ஆக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 61 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.47.91 பைசா.

நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments