Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை கடும் சரிவு

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (11:03 IST)
மும்ப ை: பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதி க அளவு சரிந்தன.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 297, நிஃப்டி 83.55 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.


அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 196.33, எஸ் அண்ட் பி 500-25.65, நாஸ்டாக் 57.60 புள்ளிகள் குறைந்தன.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று ஸ்பெயின், பிரிட்டன் தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-21.41 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.52 மணியளவில் நிஃப்ட ி 75.55 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,844.60 ஆக குறைந்தது.

இதே போல் சென்செக்ஸ ் 255.82 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,389.64 ஆக குறைந்தது.

அதே நேரத்தில் மிட் கேப் 4.73, சுமால் கேப் 19.46, புள்ளிகள் அதிகரித்தது. ஆனால் பி.எஸ ்.இ. 500- 65.63 புள்ளிகள் குறைந்தன.

இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளும் இன்று சரிவை சந்தித்தன.

ஜப்பானின் நிக்கி 471.23, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 68.89, ஹாங்காங்கின ் ஹாங்செங ் 1,076.69, சீனாவின் சாங்காய் காம்போசிட் 55.97, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 47.88 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.49 மணியளவில் 820 பங்குகளின் விலை அதிகரித்தும், 807 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 52 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 444.18, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.15.37 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments