Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 101-நிஃப்டி 25 புள்ளி சரிவு

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (16:41 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச் சந்தை, மதியம் சுமார் 2 மணிக்கு பிறகு அதிகரிக்க துவங்கியது. ஆனால் நேற்றைய இறுதி அளவை கூட எட்டவில்லை.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 100.63 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 8,739.24 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 25.10 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,657.80 ஆக குறைந்தது.

மிட் கேப் 41.14,, சுமால் கேப் 45.32, பி.எஸ ். இ 500- 32.91 புள்ளிகள் குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 2.14%, மின் உற்பத்தி 0.48% அதிகரித்தன.

ஆனால் வங்கி 0.66%, உலோக உற்பத்தி 1.08% , நுகர்வோர் பொருட்கள் 2.02%, பெட்ரோலிய நிறுவனங்கள் 2.45%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.98%, தொழில் நுட்பம் 0.64%, தகவல் தொழில் நுட்பம் 2.27% வாகன உற்பத்தி 3.04% குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜீனியர் தவிர, மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 801 பங்குகளின் விலை அதிகரித்தது. 1297 பங்குகளின் விலை குறைந்தது. 63 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments