Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (10:42 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. ஆனால் ஒரே நிலையாக இல்லாமல் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இன்று முழுவதும் இதே நிலை நீடிக்கும் என்று தெரிகிறது.

இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.10 மணியளவில் நிஃப்ட ி 9.15, சென்செக்ஸ ் 58.76 புள்ளிகள் குறைந்து இருந்தது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 2010 ஆம் ஆண்டிற்குள் 25 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க போவதாக அறிவித்தார். இது அமெரிக்க பங்குச் சந்தை வட்டாரங்களில் சிறிது நம்பிக்கையை தோற்று வித்துள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன்ஸ் 494.13, நாஸ்டாக் 68.23, எஸ் அண்ட் பி 500-47.59 புள்ளிகள் அதிகரித்தன.

ஐரோப்பிய நாடுகளில் வெள்ளிக் கிழமை எல்லா பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-94.03 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 31.30 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2724.75 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 84.35 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 8,999.56 ஆக இருந்தது.

இதே போல் மிட் கேப் 25.64, சுமால் கேப் 26.93, பி.எஸ ்.இ. 500- 30.77 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாடுகளில் இன்று பிலிப்பைன்ஸ் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் குறைந்து இருந்தது.

ஜப்பான் தேசிய தினத்தை முன்னிட்டு.ஜப்பான் பங்குச் சந்தை விடுமுறை.

ஹாங்காங்கின ் ஹாங்செங ் 150.68, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 26.52, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 33.61, சீனாவின் சாங்காய் காம்போசிட் 31.69 புள்ளிகள் குறைந்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.25 மணியளவில் 833 பங்குகளின் விலை அதிகரித்தும், 569 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 47 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை ரூ. 705.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.46.22 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments