டாலர் மதிப்பு 8 பைசா சரிவு!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (12:59 IST)
மும்ப ை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் 1 டாலரின் மதிப்பு ரூ. 50.12-13 பைசாவாக இருந்தது. இது நேற்றைய இறுதி மதிப்பை விட, 8 பைசா அதிகம்.

நேற்று மாலை வர்த்தகம் முடியும் போது இருந்த 1 டாலரின் விலை ரூ.50.20-21 பைசாவாக இருவந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு 29 பைசா அதிகரித்தது. காலையில் 1 டாலர் ரூ.50.49-50 என்ற அளவில் துவங்கியது.

பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், நேற்றைய மாலை நிலவரத்தை விட குறையவில்லை.

அந்நிய முதலீடு வருவதாலும், ரிசர்வ் வங்கியின் தலையீட்டாலும் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 கோடி ரூபாய் மதிப்பிலான 40 டன் டீசல் பறிமுதல்.. நடுக்கடலில் நடத்திய அதிரடி வேட்டை

பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறு.. 2 பத்திரிகையாளர்கள் அதிரடி கைது..!

தனது 5 மற்றும் 7 வயதுடைய மகன்களை கொலை செய்த தாய்.. தந்தை அதிர்ச்சி..!

ஆங்கில கல்வியை புறக்கணிப்பது மாணவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமம்: தயாநிதி மாறன்

பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி கட்சி..!

Show comments