Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவு!

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2008 (10:43 IST)
பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடும் சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 9 ஆயிரத்திற்கும் குறைந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு உயர்ந்தது.

பங்குச் சந்தை காலையில் கடும் சரிவை சந்தித்தாலும், சீராக முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதே நேரத்தில் இன்று பெரிய அளவு மாற்றம் இருக்காது.

இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.07 மணியளவில் நிஃப்ட ி 79.40 (2.84%), சென்செக்ஸ ் 293.43 (3.16%), புள்ளிகள் குறைந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 223.73, நாஸ்டாக் 34.80, எஸ் அண்ட் பி 500-22.54 புள்ளிகள் குறைந்தன.

ஐரோப்பிய நாடுகளும் சரிவை சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-100.01 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 57.60 (2.06%) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 2741.95 ஆக சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 220.86 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 9,070.15 ஆக குறைந்தது.

இதே போல் மிட் கேப் 51.86, சுமால் கேப் 50.16, பி.எஸ ்.இ. 500- 73.39 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் இன்று சரிவையே சந்தித்தன. ஹாங்காங்கின ் ஹாங்செங ் 392.86, ஜப்பானின் நிக்கி 180.52, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 30.78, சீனாவின் சாங்காய் காம்போசிட் 47.62, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 29.69 புள்ளிகள் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.18 மணியளவில் 306 பங்குகளின் விலை அதிகரித்தும், 1063 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 42 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 521.16 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.178.23 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments