Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவு!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (10:44 IST)
பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.06 மணியளவில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. நிஃப்ட ி 48.80, சென்செக்ஸ ் 207.76 புள்ளிகள் குறைந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 73.27, நாஸ்டாக் 30.66, எஸ் அண்ட் பி 500-11.78 புள்ளிகள் குறைந்தன.

இதே போல் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஸ்பெயின் தவிர மற்றவைகளில் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-38.96 புள்ளிகள் அதிகரித்தது.

இந்தியாவின் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் 15 விழுக்காடு குறைந்துள்ளது என்று தெரிகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பங்கு 35 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் ஏற்றுமதி-இறக்குமதி பற்றிய இறுதி புள்ளி விபரம் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

ஏற்றுமதி குறைந்துள்ளதால் ஜவுளி, தோல் பொருட்கள், கைவினை பொருட்கள் போன்ற துறைகளின் வருவாய் குறையும்.

அந்நிய செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து, டாலரின் மதிப்பு 30 பைசா அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் கடந்த நான்கு நாட்களாக குறைந்து வந்த குறியீட்டு எண்கள் நேற்று அதிகரித்தது. இன்று இலாப கணக்கு பார்ப்பார்கள். அத்துடன் இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. இதனால் இந்திய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்துள்ளது. இதே நிலையே நீடிக்க வாய்ப்பு உள்ளது

காலை 10.31 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 80.60 (2.56% ) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 3067.65 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 316.44 (3.00% ) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 10,219.72 ஆக குறைந்தது.

இதே போல் மிட் கேப் 36.54, சுமால் கேப் 31.59, பி.எஸ ்.இ. 500- 91.71 புள்ளிகள் குறைந்தன.

இன்று காலை ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில், சிலவற்றில் சாதகமாகவும், மற்றவைகளில் பாதகமாகவும் இருந்தது.

ஹாங்காங்கின ் ஹாங்செங ் 87.48, ஜப்பானின் நிக்கி 93.73, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 26.55 புள்ளிகள் குறைந்தது.

தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 2.79, சீனாவின் சாங்காய் காம்போசிட் 6.78, புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 620 பங்குகளின் விலை அதிகரித்தும், 1031 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 48 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 92.33 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.377.66 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments