Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 75 பைசா சரிவு!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (11:30 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 75 பைசா அதிகரித்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த உடன், பொதுத்துறை வங்கிகள் அதிக அளவு டாலரை விற்பனை செய்தன. அதே போல் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களும் கணிசமாக முதலீடு செய்தன. இதனால் டாலர் வரத்து அதிக அளவு இருந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் நேற்று, கடந்த ஒரு மாதமாக இல்லாத அளவு டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. நேற்று மட்டும் டாலரின் மதிப்பு 91 பைசா அதிகரித்தது. இறுதியில் 1 டாலரின் மதிப்பு ரூ.47.73-47.74 என்ற அளவில் முடிந்தது.

இன்று காலை டாலரின் மதிப்பு 53 பைசா சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. பிறகு மேலும் ரூபாயின் மதிப்பு அதிகரித்து, டாலரின் மதிப்பு 75 பைசா சரிந்தது. 1 டாலர் ரூ.46.97 என்ற அளவில் விற்பனையானது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், கடந்த ஐந்து நாட்களில் 2,100 புள்ளி அதிகரித்து இருப்பது கவனிக்கத் தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments