Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 50 பைசா உயர்வு!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (13:38 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 49.20/49.22 என்ற அளவில் இருந்தது.

பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து, அந்நிய வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்க ஆரம்பித்தன. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. 1 டாலர் ரூ. 49.50/49.51 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 50 பைசா அதிகம்.

நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 49.00/49.01 பைசா.

இதற்கு முன் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், கடந்த 10 ஆம் தேதி 1 டாலர் ரூ.49.30 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் துவக்கத்தில் இருந்து, அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றன. இவை இதுவரை சுமார் 12 பில்லியன் டாலர் அளவிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலரின் மதிப்ப ு ரூ.49.29 பைச ா.
1 யூரோ மதிப்ப ு ரூ.63.35
100 யென் மதிப்ப ு ரூ.49.53
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.80.40
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக விஜய், ஆளுனர் ரவி சந்திப்பு! வரவேற்று அழைப்பு விடுத்த அண்ணாமலை! - தமிழக அரசியலில் பரபரப்பு!

ஆளுனரை விஜய் சந்தித்தது எதற்காக? தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

ரூ.2000… ரூ.1000… ரூ.0.. குறைந்து கொண்டே வரும் பொங்கல் பரிசுத்தொகை..!

பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை! ஆப்கனில் தலிபான் அரசு உத்தரவு..!

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

Show comments