Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் தொடர் உயர்வு!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (17:12 IST)
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தை குறியீடுகளில், செவ்வாய்க்கிழமை சந்தை நிறைவடைந்த போது, இரண்டாவது நாளாக குறிப்பிடத்தக்க அளவு உயர்வு காணப்பட்டது.

பிஎஸ்இ குறியீடு இன்று வர்த்தகம் முடிவடைந்த போது, 460.30 புள்ளிகள் உயர்ந்து 10,683.39 ஆக நிறைவடைந்தது. இது நேற்றைய தினத்தைக் காட்டிலும் 4.5 விழுக்காடு அதிகமாகும்.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்குகள் 16 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து, ஒரு பங்கு விலை 79 ரூபாயாக அதிகரித்தது. டிசிஎஸ் பங்குகள் 13 விழுக்காடு அளவுக்கு உயர்வை எதிர்கொண்டு 561 ரூபாயாகவும் இருந்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 11 விழுக்காடு உயர்ந்து 258 ரூபாயாகவும், டாடா ஸ்டீல் மற்றும் சத்யம் தலா 10 விழுக்காடு உயர்ந்து முறையே ரூ. 278, ரூ. 317 ஆகவும் இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் போது ஆயிரத்து 613 பங்குகள் உயர்வை எதிர்கொண்டன. 975 நிறுவனங்களின் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.

இதேபோல் தேசியப் பங்குச் சந்தை - நிஃப்டி இன்று மாலை சந்தை நிறைவடைந்த போது, 112 புள்ளிகள் உயர்ந்து 3234.90 ஆக இருந்தது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பிஎஸ்இ, நிஃப்டி குறியீடு இந்த வாரத்தில் தொடர்ந்து உயர்வை நோக்கிச் சென்று வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments