சென்செக்ஸ் 809-நிஃப்டி 211 புள்ளி உயர்வு!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (17:23 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

சென்ற வாரம் முழுவதும் இருந்த நிலை இன்று மாறியது. அத்துடன் காலையில் இருந்து இறுதி வரை எவ்வித பாதிப்பும் இல்லாமல் பங்குச் சந்தை முன்னேறியது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 808.81 (7.68%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 11,336.66 ஆக அதிகரித்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 161.70 (4.40%), சுமால் கேப் 167.77 (3.85%), பி.எஸ ். இ 500- 266.57 (6.77%) புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 210.75 (6.43%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3490.70 ஆக உயர்ந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 8.99%, உலோக உற்பத்தி பிரிவு 7.11% , நுகர்வோர் பொருட்கள் 10.36%, தகவல் தொழில் நுட்பம் 8.30%, வங்கி 12.51%, தொழில் நுட்பம் 8.72%, மின் உற்பத்தி 9.08%, பெட்ரோலிய நிறுவனங்கள் 3.81%, பொதுத்துறை நிறுவனங்கள் 5.15%, வாகன உற்பத்தி 4.73% அதிகரித்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1679 பங்குகளின் விலை அதிகரித்தது. 934 பங்குகளின் விலை குறைந்தது. 61 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 43 பங்குகளின் விலை அதிகரித்தது. 7 பங்குகளின் விலை அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜூனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 45 பங்குகளின் விலை அதிகரித்தது. 4 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 16 பங்குகளின் விலை அதிகரித்தது. 3 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 12 பங்குகளின் விலையும் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 45 பங்குகளின் விலை அதிகரித்தது. 4 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

Show comments