Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

Webdunia
புதன், 8 அக்டோபர் 2008 (17:19 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடுமையாக சரிந்தன.

காலை 10.10 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 59.85 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 3,408.50 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தை‌யி‌ல் வ‌ர்‌த்தக‌ம் தொட‌‌ங்‌கிய முத‌ல் ஒரு ம‌ணி நேர‌த்‌தி‌ல் சென்செக்ஸ ் 663 புள்ளிகள ் சரிந்த ு 11,015 ஆ க இருந்தத ு.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருவதால் பங்குச் சந்தைகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவு நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.25 மணியளவில் சென்செக்ஸ் 663 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 11,015 ஆக இருந்தது.

நண்பகல ் 12.13 மணியளவில ் சென்செக்ஸ ் மேலு‌ம ் 912 புள்ளிகள ் சரிந்த ு 10,784 ஆ க குறை‌ந்தது.

‌ பி‌ன்ன‌ர ் ச‌ந்தை மெ‌ல்ல மெ‌ல்ல ச‌ரி‌வி‌லிரு‌ந்து ‌மீள‌த் துவ‌ங்‌கியதை அடு‌த்து இ‌‌ன்றைய வ‌ர்‌த்தக நேர இறு‌தி‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 366.88 பு‌ள்‌ளிக‌ள் ச‌ரி‌ந்து கு‌றி‌யீ‌ட்டு எ‌ண் 11,328.36 ஆக‌க் குறை‌ந்தது.

இதே போல் மிட் கேப் 246.68, சுமால் கேப் 277.20, பி.எஸ ்.இ. 500- 170.80 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி இ‌ன்றைய வ‌ர்‌த்தக நேர இறு‌தி‌யி‌ல் 93 புள்ளிகள் ச‌ரி‌ந்து குறியீட்டு எண் 3513.65 ஆக குறை‌ந்தது.

காலை வர்த்தகத்தில் உலோக உற்பத்தி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில் நுட்பம், மின் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி பிரிவு உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments