Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (11:08 IST)
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை 10.05 மணியளவில் நிஃப்டி 85.20, சென்செக்ஸ் 257.76 புள்ளிகள் அதிகரித்தன.

பங்குச் சந்தைகளின் கடும் வீழ்ச்சியை தொடர்ந்து பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நேற்று சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன்படி வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருப்பாக வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடு குறைத்துள்ளது. இதனால் நிதிச் சந்தையில் பணப்புழக்கம் ரூ.20 ஆயிரம் கோடி அதிகரிக்கும்.

ரிசர்வ் வங்கி முதன் முறையாக 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு, முதன் முறையாக ரொக்க கையிருப்பு விகிதத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல் பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபியும் அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பி நோட் எனப்படும், பங்கேற்பு பத்திரங்களின் விதிமுறைகளையும் தளர்த்தி உள்ளது.

இதன்படி அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை பங்குச் சந்தையின் முன்பேர வர்த்தகத்திற்கும் பொருந்தும். முன்பு அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் மொத்த முதலீட்டில், பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக முதலீடு செய்வதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் மொத்த முதலீட்டில், 40 விழுக்காடு மட்டுமே பங்கேற்பு பத்திரங்களின் முதலீடாக இருக்க வேண்டும். இப்போது இந்த உச்சவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவு முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கிறது.

செபி சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் பங்கேற்பு பத்திரங்கள் மூலமாக முதலீடு செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்து, இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 84,831.35 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. செபி நேற்று பங்கேற்பு பத்திரங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தாலும், உடனடியாக அந்நிய முதலீடு குவிவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரியவில்லை.

அமெரிக்க பங்குச் சந்தை நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது.

டோவ் ஜோன்ஸ் 10 ஆயிரத்தில் இருந்து குறைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் டோவ்ஜோன்ஸ் 369.88, நாஸ்டாக் 84.43, எஸ் அண்ட் பி 500- 42.34 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் சரிந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-281.85 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.37 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 101.25 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3703.60 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 250.59 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 12,052.29 ஆக அதிகரித்தது.

இதே போல் மிட் கேப் 68.71, சுமால் கேப் 72.42, பி.எஸ ்.இ. 500- 91.08 புள்ளிகள் அதிகரித்தன.

ஆனால் பங்குச் சந்தைகளில் இன்று காலையில் இருக்கும் சாதகமான நிலை நாள் முழுவதும் இருக்குமா என்பது கேள்விக்குறிதான். இன்று பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றே தெரிகிறது.


இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் சாதகமாகவும், சிலவற்றில் பாதகமாகவும் இருந்தது.

ஹாங்காங்கின ் ஹாங்செங ் 878.64, ஜப்பானின் நிக்கி 212.35,சீனாவின் சாங்காய் காம்போசிட் 21.53 புள்ளிகள் குறைந்தது.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 53.20, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 8.13 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.46 மணியளவில் 1101 பங்குகளின் விலை அதிகரித்தும், 797 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 52 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 1,169.33 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 661.00 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments