சென்செக்ஸ் 725 – நிஃப்டி 216 புள்ளி சரிவு!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (17:35 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், இறுதி வரை சிறிதும் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 12 ஆயிரத்திற்கும் குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 724.62 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 11,801.70 ஆக குறைந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 333.57, சுமால் கேப் 378.47, பி.எஸ ். இ 500- 292.79 புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 215.95 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3602.35 ஆக சரிந்தது.

ரியல் எஸ்டேட் 9.91%, உலோக உற்பத்தி பிரிவு 9.91% , நுகர்வோர் பொருட்கள் 7.27%, மின் உற்பத்தி 7.24%, பெட்ரோலிய நிறுவனங்கள் 6.14%, தகவல் தொழில் நுட்பம் 5.82%, வங்கி 4.00% ,தொழில் நுட்பம் 5.62%, பொதுத்துறை நிறுவனங்கள் 3.90%, வாகன உற்பத்தி 3.50% குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 281 பங்குகளின் விலை அதிகரித்தது. 2369 பங்குகளின் விலை குறைந்தது. 27 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 35 பங்குகளின் விலை அதிகரித்தது. 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 47 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 44 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 19 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 12 பங்குகளின் விலையும் குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் என்ன தப்பு பண்ணேன்.. ஏன் கைவிட்டீங்க!. புலம்பும் ஜெயக்குமார்.

ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.O இல்லை.. பூஜ்யம்தான்!. எடப்பாடி பழனிச்சாமி ராக்ஸ்!..

திருமணமான பெண்ணை மறுதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டால் அது குற்றமல்ல: உச்சநீதிமன்றம்

25,000 ரூபாய் வரை இழப்பீடு தருகிறது இந்திய ரிசர்வ் வங்கி.. யார் யாருக்கு கிடைக்கும்?

சிறுமிகள் திடீர் திடீரென காணாமல் போவதாக பெய்டு விளம்பரங்கள்? வதந்தி பரப்புபவர்களின் நோக்கம் என்ன?

Show comments