Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (10:33 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடுமையாக சரிந்தன.

காலை 10.10 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 116.30 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 3702.00 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 371.32 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 12,155.00 ஆக சரிந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் பங்குச் சந்தைகளில் சரிவு நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.25 மணியளவில் சென்செக்ஸ் 334.93 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 12,191.37 ஆக இருந்தது.

இதே போல் மிட் கேப் 122.77, சுமால் கேப் 118.13, பி.எஸ ்.இ. 500- 126.18 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 112.05 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3706.25 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.19 மணியளவில் 318 பங்குகளின் விலை அதிகரித்தும், 1169 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 35 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 3 ஆம் தேதி 1,662.26 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 58.75 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

காலை வர்த்தகத்தில் உலோக உற்பத்தி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில் நுட்பம், மின் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி பிரிவு உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments