Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் தொடர்ந்து சரிவு!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (11:34 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிவை சந்தித்தன.

அமெரிக்கா பங்குச் சந்தைகளில் நேற்று கடுமையான நெருக்கடி நிலவியது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் புஷ் நிர்வாகத்தின் 700 பில்லியன் டாலர் நிதி மற்றும் முதலீடு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்யும் மசோதா தோல்வி அடைந்தது.

இந்த மசோதாவிற்கு ஆதரவாக 228 வாக்குகளும், எதிராக 205 வாக்குகளும் பதிவாகின. இதை அடுத்து ஜனநாயகட்சி தலைவர் மீண்டும் வியாழக்கிழமை மற்றொரு மசோதா தாக்கல் செய்வதாக அறிவித்தார்.

அந்நாட்டு நிதி அமைச்சர் ஹென்றி பால்சன் கூறுகையில், நாங்கள் மசோதைவை நிறைவேற்ற முயற்சிப்போம். இதே முடிந்த அளவு விரைவாக செய்ய வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்க பங்குச் சந்தையில் இதுவரை இல்லாத அளவு டோவ் ஜோன்ஸ் 777 புள்ளிகள் சரிந்தது. இதற்கு முன் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நாளில் 684 புள்ளிகள் சரிந்தது.

அமெரிக்க பொருளாதாரத்திற்கு தினசரி புத்துயிர் ஊட்டும் கடன் பத்திர சந்தைகளையும் சரிந்தது. அமெரிக்க நாடாளுமன்ற வாக்கெடுப்பு முடியும் போது, அந்நாட்டு பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்யும் போக்கு அதிக அளவு இருந்தது.

அமெரிக்காவில் தினசரி இன்று எந்த வங்கி, முதலீட்டு நிறுவனம் நஷ்ட கணக்கை காண்பிக்குமோ, திவாலாகுமோ என்ற பீதி எழுந்துள்ளது.

நேற்று மற்றொரு அடமான கடன் கொடுக்கும் வங்கியான வசோவியா கார்ப்பரேஷன் நஷ்டம் அடைந்ததாக அறிவித்தது. இதை சிட்டி கார்ப்பரேஷன் மேற்கொள்வதாக அறிவித்தது.

ஏற்கனவே மெர்லி டான்ச், பீயர் ஸ்டிரின், வாஷிங்டன் மியூச்சுவல் பண்ட், லெக்மான் பிரதர்ஸ் ஹோல்டிங் ஆகியவை நஷ்டமடைந்ததாக அறிவித்துள்ளது. இதில் சில திவாலா அறிவிப்பு செய்துள்ளன.

அதே நேரத்தில் பெடரல் டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் 110 க்கும் மேற்பட்ட வங்கிகள் நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ளன.

இதே நேரத்தில் அமெரிக்க பொருளாதாரத்தின் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு ஏற்படாது. இதன் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்ப நாட்கள் ஆகும் என்ற கருத்து நிலவுவதால் நியூயார்க் பண்டக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயில் முதலீடு செய்வது குறைந்தது. நேற்று 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 96.36 டாலராக குறைந்தது. ஒரே நாளில் பீப்பாய்க்கு 10 டாலர் குறைந்தது.

ஆனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் போன்ற உலோகங்கள் மீது திரும்பியுள்ளது. 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 911.70 டாலராக அதிகரித்தது. இதன் விலை நேற்று மட்டும் அவுன்சுக்கு 23.20 டாலர் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. டோவ்ஜோன்ஸ் 777.68, நாஸ்டாக் 199.61 புள்ளி குறைந்தது.

ஐரோப்பாவில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-269.70 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 42.95 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3807.10 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 174.49 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 12,421.26 ஆக சரிந்தது.

இதே போல் மிட் கேப் 128.99, சுமால் கேப் 172.61, பி.எஸ ்.இ. 500- 86.35 புள்ளிகள் குறைந்தன.

இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் சீனா தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலையே இருந்தது.

ஹாங்காங்கின ் ஹாங்செங ் 433.02, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 55.72, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 20.06, ஜப்பானின் நிக்கி 337.78 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.55 மணியளவில் 257 பங்குகளின் விலை அதிகரித்தும், 1798 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 52 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை நேற்று 476.94 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 554.82 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

காலை வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், வங்கி, தகவல் தொழில் நுட்பம், உலோக உற்பத்தி, வாகன உற்பத்தி உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் சரிந்தன.

இன்று பங்குச் சந்தைகளில் அதிக மாற்றத்துடன் இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments