Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 506 – நிஃப்டி 135 புள்ளி சரிவு!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (17:15 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள் தொடர்ந்து குறைந்து வந்தன. மதியம் 2.30 மணிக்கு பிறகு நிலைமை சிறிது மாறினாலும், இறுதியில் குறியீட்டு எண்கள் முந்தைய நாள் அளவை கூட எட்டவில்லை.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 13 ஆயிரத்திற்கும் குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 506.43 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 12,595.75 ஆக குறைந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 211.49, சுமால் கேப் 308.75, பி.எஸ ். இ 500- 200.72 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி135.20 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3850.05 ஆக குறைந்தது.

வங்கி 5.68%, தொழில் நுட்பம் 5.68%, தகவல் தொழில் நுட்பம் 5.47%, ரியல் எஸ்டேட் 5.26%, மின் உற்பத்தி பிரிவு 5.22%, நுகர்வோர் பொருட்கள் 4.86 %, உலோக உற்பத்தி பிரிவு 3.77%, பொதுத்துறை நிறுவனங்கள் 2.88%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.72% குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளில் சீனா, பிலிப்பைன்ஸ் தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன.

ஐரோப்பிய நாடுகளில் மாலை 5 மணியளவில் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-178.79 புள்ளி குறைந்து இருந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 357 பங்குகளின் விலை அதிகரித்தது. 2287 பங்குகளின் விலை குறைந்தது. 41 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடுமையாக குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 46 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜூனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 1 பங்குகளின் விலை அதிகரித்தது. 48 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 13 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 12 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மிட்கேப் 50 பிரிவில் உள்ள 49 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 45 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments