Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் சரிவு!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (11:30 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 13 ஆயிரத்திற்கும் குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

அமெரிக்கா அரசு திவாலான, நஷ்டமடைந்த வங்கி, முதலீட்டு நிறுவனங்களை மீண்டும் இயங்க வைக்க 700 பில்லியன் டாலர் நிதி அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெற வேண்டும். இதில் புஷ் நிர்வாகத்திற்கும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் 700 பில்லியன் டாலர் நிதி உதவி செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இதன் முடிவை பொறுத்தே பங்கு சந்தைகளின் பிரதிபலிப்பு இருக்கும்.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை சாதகமான நிலை இருந்தது. எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. டோவ்ஜோன்ஸ் 121.07, எஸ் அண்ட் பி 500- 03.83 புள்ளி அதிகரித்தது. நாஸ்டாக் 03.23 புள்ளி குறைந்தது.

ஆனால் ஐரோப்பாவில் எல்லா பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-108.55 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் அக்டோபர் மாதத்திற்கு முன்பேர வர்த்தகத்தின் ஒப்பந்தங்களில் நிஃப்டி 13 புள்ளி அதிகரித்தது.

காலை 10.32 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 43.85 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3941.40 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 149.82 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 12,952.36 ஆக சரிந்தது.

இதே போல் மிட் கேப் 87.80, சுமால் கேப் 92.74, பி.எஸ ்.இ. 500- 69.33 புள்ளிகள் குறைந்தன.

இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் சீனா, பிலிப்பைன்ஸ் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலையே இருந்தது.

ஹாங்காங்கின ் ஹாங்செங ் 399.19, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 12.76, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 17.33, ஜப்பானின் நிக்கி 89.02 புள்ளிகள் குறைந்தது.

சீனாவின ் சாங்காய ் 180 பிரிவ ு 22.92 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 11 மணியளவில் 384 பங்குகளின் விலை அதிகரித்தும், 1689 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 50 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை 643.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 543.57 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

காலை வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், வங்கி, தகவல் தொழில் நுட்பம், உலோக உற்பத்தி, வாகன உற்பத்தி உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் சரிந்தன.

அதே நேரத்தில் அந்நியச் செலவாணி சந்தையில் காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 பைசா சரிந்தது. பெட்ரோலிய நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலர் வாங்கினார்கள்.

அமெரிக்க அரசு வங்கி, முதலீட்டு நிறுவனங்களுக்கு அளிக்க போகும் உதவி, இன்று எந்த விதத்திலும் ஆசிய, இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே போல் இந்தியா அமெரிக்காவுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தின் தாக்கமும் இல்லை.

இந்திய பங்குச் சந்தைகளும் காலை சரிவை சந்தித்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கியதற்கு பிறகு, இங்கும் நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெரிகிறது.















எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments