Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 445– நிஃப்டி 125 புள்ளி சரிவு!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (16:49 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள் தொடர்ந்து குறைந்து வந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4 ஆயிரத்திற்கும் குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 445 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,102.18 ஆக குறைந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 152.23, சுமால் கேப் 188.25, பி.எஸ ். இ 500- 164.03 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 125.30 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3985.25 ஆக குறைந்தது.

தொழில் நுட்பம் பங்குகளின் விலை 3.39%, உலோக உற்பத்தி பிரிவு 4.76%, ரியல் எஸ்டேட் 6.33%, பொதுத்துறை நிறுவனங்கள் 3.16%, மின் உற்பத்தி பிரிவு 3.47%, பெட்ரோலிய நிறுவனங்கள் 3.02% வங்கி 4.27% குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளில் சீனா, பிலிப்பைன்ஸ் தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன.

ஐரோப்பிய நாடுகளில் மாலை 4.20 மணியளவில் எல்லா பங்குச் சந்தைகளும் சரிவையே சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-105.11 புள்ளி குறைந்து இருந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 445 பங்குகளின் விலை அதிகரித்தது. 2169 பங்குகளின் விலை குறைந்தது. 59 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடுமையாக குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 8 பங்குகளின் விலை அதிகரித்தது. 42 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜூனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 45 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 19 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 12 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மிட்கேப் 50 பிரிவில் உள்ள 49 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 46 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments