பங்குச் சந்தைகளில் தொடர்ந்து உயர்வு!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (14:08 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து எல்லா பிரிவு குறீயிட்டு எண்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இன்று மாலை வர்த்தகம் முடிவதற்குள் சென்செக்ஸ் 14 ஆயிரத்தை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று கூட்டினார்.

இதில் அமெரிக்க பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போதையை சூழ்நிலை பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சரவை சகாக்களுக்கு விளக்கினார். இந்த கூட்டத்தில் இந்திய பொருளாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறிய பிரதமர், நிலைமையை உண்ணிப்பாக கண்காணிக்கும்படி அமைச்சர்களிடம் கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கை, பங்குச் சந்தைக்கு ஊக்கமளிப்பாக உள்ளது என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன.

இதனால் தொடர்ந்து இரண்டு பங்குச் சந்தைகளும் ஏறுமுகமாக உள்ளன.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்திய வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. பொதுத்துறை வங்கிகள் அதில் முதலீடு செய்யவில்லை என அறிவித்திதது நினைவிருக்கலாம்.

நண்பகல் 11.47 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 172.50 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,210.15 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 406.30 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,721.90 ஆக அதிகரித்தது.

இதே போல் சென்செக்ஸ் 606.88 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,922.48 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 135, பி.எஸ ்.இ. 500- 200, சுமால் கேப் 128.43 புள்ளி அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கணிசமாக அதிகரித்தன.

















எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் ரவியை திடீரென சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி.. என்ன காரணம்?

சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. கிடைப்பது எப்போது?

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாய்-மகன் கைது.. 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மாற்றமில்லை.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்..!

Show comments