Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ்238 - நிஃப்டி 68 புள்ளி சரிவு!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (17:33 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் குறைந்தன. இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் கடைசி வரை எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் ஏற்ற இறக்கமாக இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 238.15 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,662.61 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 68.45 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4400.25 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 69.27, சுமால் கேப் 61.19, பி.எஸ ். இ 100- 76.19 புள்ளி குறைந்தது.

உலோக உற்பத்தி பிரிவு பங்குகளின் விலை 5.48%, பெட்ரோலிய நிறுவனங்கள் 2.18%, மின் உற்பத்தி 1.67%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.54%, ரியல் எஸ்டேட் 1.52% குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 931 பங்குகளின் விலை அதிகரித்தது. 1722 பங்குகளின் விலை குறைந்தது. 77 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 74.60, சி.என்.எக்ஸ். ஐ.டி 22.95, பாங்க் நிஃப்டி 13.60, சி.என்.எக்ஸ்.100- 62.15, சி.என்.எக்ஸ். டிப்டி 74.40, சி.என்.எக்ஸ் 500- 53.10, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 46.65, மிட் கேப் 50- 19.50 புள்ளி குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments