Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை‌யி‌ல் சரிவு!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (10:56 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் குறைந்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் இன்று பாதிக்கப்பட்டன.

பெட்ரோலிய. கச்சா எண்ணெய் உற்பத்திய செய்யும் நாடுகளின் அமைப்பான ஓபெக் கூட்டம ் நேற்று நடைபெற்றது. இதில் கச்சா எண்ணெய் உற்பத்தியை சிறிதளவு குறைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு அமல்படுத்தும் போது கச்சா எண்ணெய் உற்பத்தி தினசரி 28.8 மில்லியன் பீப்பாய்களாக குறையும். தற்போது உள்ள அளவில் இருந்து தினசரி 5 லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக முடிவு செய்துள்ளன.

உலக நாடுகளின் மொத்த தேவையில் 40 விழுக்காடு கச்சா எண்ணெய் ஓபெக் நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முடிவால் தற்போது கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு இருந்தது. இதே போல் ஐரோப்பிய சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.

இதன் தாக்கத்தால், இன்று ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதிப்பு இருந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் காலையில் குறியீட்டு எண்கள் குறைந்தாலும், நண்பகலில் அதிகரிப்பதற்கு வாய்ப்புண்டு.

காலை 10.40 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 119.39 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,781.37 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 34.60 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4434.10 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 5.67, பி.எஸ ்.இ. 500- 31.70 புள்ளி குறைந்தது. சுமால் கேப் மட்டும் 10.08 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையிலும் தகவல் தொழில் நுட்பம், நிஃப்டி மிட்கேப் 50 பிரிவு மட்டும் உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.38 மணியளவில் 824 பங்குகளின் விலைகள் அதிகரித்தது. 970 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 71 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments