பங்குச் சந்தையில் சரிவு!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (11:23 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் கடுமையாக சரிந்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் இன்று பாதிக்கப்பட்டன.

பெட்ரோலிய, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான ஓபெக் கூட்டம், இன்று வியன்னாவில் நடைபெறுகிறது. சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதன் விலை சரிவை தடுத்து நிறுத்த, இந்த கூட்டத்தில் உற்பத்தியை குறைக்கும் முடிவு எடுக்கப்படலாம். இவை 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றன.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்தே, கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இருக்கும்.

காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 201.77 புள்ளி குறை‌ந்து குறியீட்டு எண் 14,743.20 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 56.80 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4425.50 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 29.53, சுமால் கேப் 15.83, பி.எஸ ்.இ. 500- 62.82 புள்ளி சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 695 பங்குகளின் விலைகள் அதிகரித்தது. 1065 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 62 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா கொடுத்த அழுத்தம்.. ஈரானுக்கு உதவ முடியாத நிலையில் இலங்கை..!

AI தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்திய அமெரிக்கா.. முதல் 24 மணி நேரத்தில் நடந்தது இதுதான்..!

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்.. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வீடுகளுக்கு மின்சார கட்டணம் குறைவு.. அதிரடி அறிவிப்பு..!

ஈரான் விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த குண்டு போட்ட இஸ்ரேல்.. ஈரான் பதிலடி கொடுக்குமா?

விஜய் - அண்ணாமலை - சீமான் புதுக்கூட்டணியா? திராவிட கட்சிகளுக்கு சவாலாக இருக்குமா?

Show comments