Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைக‌ளில் உயர்வு!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (10:53 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தையில் இன்று காலை குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

தென் அமெரிக்காவில் கியூபாவில் புயல் தாக்கியுள்ளது. இது மெக்ஸிகோவை தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் மெக்ஸிகோ வளைகுடாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்கா, அதன் தேவையின் பெரும் பகுதியை மெக்ஸிகோ வளைகுடாவில் இருந்து வாங்குகிறது.

உலக அளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் ஆசிய நாட்டு சந்தையின் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இன்று காலை அக்டோபர் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 108.60 டாலராக உயர்ந்தது.

இவை பாதமான தகவலாக இருந்தாலும், இந்தியா-அமெரிக்காவுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. இது பங்குச் சந்தைக்கு சாதகமான தகவலாக கருதப்படுகிறது.

காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 511.67 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,995.50 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 149.40 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4501.70 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 105.38, சுமால் கேப் 104.46, பி.எஸ ்.இ. 500- 164.26 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 1465 பங்குகளின் விலைகள் அதிகரித்தது. 436 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 48 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

இன்று மாலை வரை பங்குச் சந்தையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றே தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments